Azhagoviyam 2025: A Celebration of Art and Young Talent Students
- Nambikkai Vasaal
- 3 days ago
- 1 min read
Nambikkai Vaasal Free Old Age Home in Salem
சேலம் நம்பிக்கை வாசல் இலவச முதியோர் இல்லத்தின் சார்பில், பள்ளி மாணவ-மாணவியர்களுக்காக “அழகோவியம் 2025” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி 30.11.2025 அன்று சிறப்பாக நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி, சேலம் மாநகர், ஓமலூர், எடப்பாடி, வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்று, பல்துறை தலைப்புகளில் ஓவியங்களை உருவாக்கி நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் சிறப்புப் பரிசு பெற்றவர்களும் சிறப்புக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதோடு, பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு சேலம் டேலண்ட் செஸ் அகாடமியின் திரு. சக்திவேல் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும், யாசகம் பவுண்டேஷன் நிறுவனரான திரு. அமர்நாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களை வாழ்த்தி பேசிச் சான்றிதழ்கள் வழங்கினார்.
நம்பிக்கை வாசல் இலவச முதியோர் இல்லத்தின் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொகுப்புரையாற்றினார். பின்னர், பொருளாளர் திரு. சங்கர் அவர்கள் நன்றியுரை ஆற்றியதன் மூலம் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்புற நடைபெறச் செய்வதில் திரு. கார்த்திக், திரு. தனஞ்செயன், திரு. யாசர், திருமதி. யோகேஸ்வரி, திருமதி. கலைச்செல்வி, திரு. வெங்கடேஷ், திருமதி. விஜயலட்சுமி, திரு. பிலால், திரு. அபுதாஹிர், செல்வி. சுமதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களின் அர்ப்பணிப்புடன் பங்கேற்றி குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர்.
இந்த முக்கியமான கலை நிகழ்வு, மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதோடு, சமூக ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
Help Us to Feed Elders

Account Details
Name : Nambikkai Vaasal Trust
Account No : 118611 5000019 668
IFSC Code : KVBL0001186
Bank : Karur Vysya Bank
Branch : Salem Main Branch




.png)

.png)



























அருமையான நிகழ்ச்சி...
Super...